Webdunia - Bharat's app for daily news and videos

Install App

67 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன உலகக்கோப்பை சாம்பியன்: ஆசஷ் தொடரில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:58 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி தற்போது ஆசஷ் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இன்னொரு போட்டி டிராவில் முடிவடைந்தது
 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாபுசாங்கே 74 ரன்களும், வார்னர் 61 ரன்களும் எடுத்தனர். 
 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் மூன்று ஓவர்கள் மந்தமாக சென்று கொண்டிருந்த நிலையில் 4வது ஓவரில் இருந்து விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. அந்த அணியின் டென்லி எடுத்த 12 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள் ஆகும். இங்கிலாந்து அணி 27.5 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
 
இதனையடுத்து 112 ரன்கள் முதல் இன்னிங்ஸில் அதிகம் பெற்ற ஆஸ்திரேலியா தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments