Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசஷ் தொடர்: பட்லர் அதிரடியால் இங்கிலாந்துக்கு கவுரமான ஸ்கோர்!

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (06:37 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களம் இறங்கியது


அந்த அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்து கொண்டிருந்தாலும் கேப்டன் ரூட் மற்றும் பர்ன்ஸ் மட்டும் ஓரளவு சமாளித்து ஆடினர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பட்லர் களமிறங்கி அதிரடியாக ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். அவர் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்


நேற்றைய முதல் நாள் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் மார்ஷ் 4 விக்கெட்டுகளையும் ஹாசில்வுட் மற்றும் கம்மிங் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் பட்லர் தனது அதிரடியை தொடர்ந்து, சதத்தை பூர்த்தி செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments