ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (12:54 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஷ் தொடரின் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இன்றைய போட்டிகளில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த நிலையில், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மளமளவென தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.ஹாரி புரூக் 52 ரன்களும், போப் 46 ரன்களும், ஸ்மித் 33 ரன்களும் எடுத்தனர் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலிய அணியின் மைக்கல் ஸ்டார்க் மிக அபாரமாக பந்து வீசி 13 ஓவர்களில் 58 ரன்கள் மட்டும் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது ஆஸ்திரேலியா அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments