பெரோஸ் ஷா கோட்லா மைதானம் இனி அருன் ஜெட்லி மைதானம் – செப்டம்பர் 12 ஆம் தேதி பெயர் மாற்றம் !

புதன், 28 ஆகஸ்ட் 2019 (15:27 IST)
மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவாக அவரது பெயரை பொரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்கு சூட்டப்படவுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மூச்சு திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் நாள் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது சொந்த மாநிலமான டெல்லியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் முக்கியப் பதவி வகித்த அவரது நினைவாக அவரது பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த பெயர் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி நடக்க இருக்கிறது. மேலும் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஒரு அரங்குக்கு இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் பெயரும் சூட்டப்பட உள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இந்திய கடற்படையோடு மோதும் தமிழக ஹாக்கி அணி – அகில இந்திய ஹாக்கி போட்டி