Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்ராவின் 90 மைல் பந்து… வாழ்நாளில் சந்தித்ததில்லை- ஆண்டர்சன் கருத்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (17:19 IST)
லார்ட்ஸ் டெஸ்ட்டில் பூம்ரா மற்றும் ஆண்டர்சன் இடையிலான சண்டை கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆண்டர்சன் பேட் செய்ய வந்த போது அவரை தாக்கும் விதமாக பூம்ரா தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசினார். இதனால் ஆண்டர்சன் கடுப்பாகினார். ஆனால் போட்டி முடிந்த போது பூம்ரா அவரிடம் சென்று தான் வேண்டுமென்றே செய்யவில்லை என மன்னிப்புக் கேட்க சென்ற போது ஆண்டர்சன் அவமானப் படுத்தினார். பின்னர் பூம்ரா ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்ய வந்த போது இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் பவுன்சர் வீசி பூம்ராவை தாக்க முயன்றனர். ஆனால் பூம்ரா அதை சிறப்பாகக் கையாண்டு 36 ரன்கள் சேர்த்தார். அது வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.

இந்நிலையில் அந்த தருணம் குறித்து பேசியுள்ள ஆண்டர்சன் ‘நான் களத்துக்கு வரும் போது பிட்ச் மெதுவாக இருப்பதாக சொல்லியதால் நான் கொஞ்சம் அலட்சியமாக இருந்தேன். ஆனால் பூம்ரா வீசிய பந்துகள் 90 மைல் வேகத்தில் வந்தது. இதுவரை என் வாழ்நாளில் சந்தித்திராத ஒன்று என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவர் என்னை அவுட் ஆக்க முயலாமல் காயப்படுத்தி உட்கார வைக்க முயற்சி செய்தார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments