Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Quarantine-ல் மாரியப்பன்: இந்திய கொடி ஏந்துவதற்கு தடா

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (13:01 IST)
தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இவரால் பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி செல்ல முடியாது. 
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் இன்று பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் 164 மூன்று நாடுகளை சேர்ந்த 4500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவிலிருந்து 54 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்வார் என கூறப்பட்டது. ஆனால், இந்தியா சார்பில் சென்ற 6 வீரர்கள் பயணத்தின் போது சமூக இடைவெளியியை பின்பற்றவில்லையாம். 
 
இதில் மாரியப்பனும் ஒருவர். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் என ரிசல்ட் வந்த போதிலும் பாதுகாப்பு கருதி அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இவரால் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி செல்ல முடியாது. அதோடு இவருக்கு பதிலாக தேக் சந்த் (ஈட்டி எறிதல்) இந்திய கொடியை ஏந்தி செல்லுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments