Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிரொலி: ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்படும் ஒலிம்பிக்?

கொரோனா எதிரொலி: ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்படும் ஒலிம்பிக்?
, திங்கள், 23 மார்ச் 2020 (09:57 IST)
ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகவல். 
 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பானில் நடைபெற உள்ளது. ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கொரோனா பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் கொரோனாவை தாண்டியும் ஒலிம்பிக் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன. கிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் ஜோதி கொண்டு வரப்பட்டு ஜப்பானில் ஏற்றப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் முன்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என நம்புவதாய் ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாக குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். 
 
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலையில் நடப்பது சந்தகமே என ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகும்படி தங்களது வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிவுறுத்த்தியுள்ளதாகவும் தெரிகிறது. 
 
அப்படியானல் ஒலிம்பிக் அடுத்த ஆண்டு தான் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், ஒலிம்பிக்கை ஒத்திவைப்பது பற்றி 4 வாரங்களில் முடிவு செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்ஜெண்டினா, இத்தாலி கால்பந்து வீரர்களுக்கு கொரோனா!