Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவைத் திரும்பப்பெற்ற ராயுடு – இந்திய அணியில் இடம் கிடைக்குமா ?

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:52 IST)
சமீபத்தில் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீரர் அம்பாத்தி ராயுடு ஓய்வு முடிவைத் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான அம்பத்தி ராயுடுவுக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் இருந்தாலும், அவரது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததால் வீரர்கள் யாராவது காயம் அடையும் பட்சத்தில் அவர் அணியில் சேர்த்து கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவான், விஜய் ஷங்கர் காயத்தினால் விலகியபோதும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாததால் விரக்தியடைந்த அவர் அனைத்துவிதமானக் கிரிக்கெட்டுக்கும் முழுக்குப் போடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் ஓய்வு முடிவு பற்றிக் கேள்வி எழுப்பியபோது ‘ உலகக்கோப்பையில் இடம் கிடைக்காததால் விரக்தியில் நான் அந்த முடிவை எடுத்தேன். ஆனால் இப்போது அதைக் கடந்து சென்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனால் ஓய்வு முடிவைத் திரும்பப்பெறுவது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறேன். இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments