Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணியில் என்னென்ன மாற்றம்?

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:39 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கில் வென்று எட்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுவிட்டால் நான்காவது இடத்திற்கு முன்னேறி விடும். இதனை அடுத்து அந்த அணிக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் ஆஸ்திரேலியா தற்போது 10 புள்ளிகளுடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியில் ஃபரூக்கிற்கு பதில் நவீன் களமிறங்கியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments