Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்: வரலாற்று சாதனை..!

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்: வரலாற்று சாதனை..!
, சனி, 25 மார்ச் 2023 (10:51 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை செய்துள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இதனை அடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 17.5 அவர்களின் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் அணிக்கே வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வென்றதே இல்லை என்ற நிலையில் முதல் முறையாக வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஐபிஎல்: இறுதி போட்டிக்கு நுழைந்தது மும்பை..!