சச்சின் இல்லாமல் 7 ஆண்டுகள்… கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (11:18 IST)
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்.. அந்த மதத்துக்கு சச்சின்தான் கடவுள் என்றால் அது மிகையில்லை. 90 களில் பிறந்த எந்த வொரு இளைஞருக்கும் சச்சின்தான் ஆதர்ஸம். இந்தியாவில் உள்ள எல்லா 90ஸ் கிட்ஸ்களின் சச்சின் பயன்படுத்திய எம் ஆர் எஃப் பேட் இருந்திருக்கும். அந்த அளவுக்கு ஒரு தலைமுறையையே வசப்படுத்திய சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு இதே நாளில்தான் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

தனது கடைசி டெஸ்ட்டை தனது தாய் மற்றும் பயிற்சியாளருக்காக மும்பையில் நடத்த சொல்லி அவர் வைத்த வேண்டுகோளை அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நடந்தது. ஆனால் போட்டி மூன்றே நாட்களில் முடிய சச்சினுக்கு விடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சர்வதேசக் கிரிக்கெட்டில் மொத்தம் 24 ஆண்டுகள் விளையாடிய சச்சின் விடைபெற்று இன்றோடு 7 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் பலரும் இதை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments