Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை-மும்பை போட்டியில் சூதாட்டம்: 6 பேர் கைது!

Advertiesment
csk vs mi
, வெள்ளி, 13 மே 2022 (17:06 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் செய்ததாக பிரயாக்ராஜ் என்பவர் தலைமையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்
 
இவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் 14 செல்போன்கள் கார்கள் கம்ப்யூட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
 
சூதாட்டம் காரணமாக ஒருவேளை சென்னை - மும்பை போட்டியின் ஆட்டம் திசை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரில் விராத் கோஹ்லி நீக்கம்!