Publish Date: Fri, 13 May 2022 (15:27 IST)
Updated Date: Fri, 13 May 2022 (15:28 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது சவரன் ரூ.38,040க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்தது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,755-க்கும், சவரன் ரூ.38,040க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20க்கு விற்கப்படுகிறது.