Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவருடன் வாக்குவாதம்: தோனிக்கு 50% அபராதம்

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (07:44 IST)
நோபால் சர்ச்சை குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
 
நேற்றைய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது
 
இந்த நிலையில் கடைசி ஓவரில் ஒரு பந்து நோபால் என ஒரு அம்பயரால் அறிவிக்கப்பட்டு பின்னர் இன்னொரு அம்பயரால் நோபால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி களத்திற்கு சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் போட்டியின் நடுவே களத்திற்குள் புகுந்து நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தோனி களத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

சிஎஸ்கே அணி வீரரின் தந்தை காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

உங்களை இந்திய ஜெர்ஸியில் பார்க்க ஆசைப்படுகிறேன்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments