பஞ்சாப் அணியுடனான வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருதுபெற்ற கைரன் பொல்லார்டு விருதை தனது மனைவிக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
12 ஆவது ஐபிஎல் தொடரின் 24வது போட்டியான மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை கடைசி ஓவரின் கடைசி பந்தில் மும்பை அணி இரண்டு ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் 31 பந்துகளில் 83 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் சதம் வீணானது
ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய கைரன் பொல்லார்டு ‘ முதலில் கடவுளுக்கு நன்றி. இன்று எனது மனைவியின் பிறந்தநாள். அதனால் இந்த விருதை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன். வான்கடே மைதானத்தில் பேட் செய்வது எப்போதும் கொண்டாட்டமான விஷயம். அஷ்வினின் ஓவர்களில் அதிகமாக பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த ஆடுகளம் பந்து வீசுவதற்கு கடினமானதாகவும் பேட் செய்வதற்கு எளிமையாகவும் இருக்கும். அதனால் பவுலர்களைக் குறை சொல்ல முடியாது. ரோஹித்தான் அணியின் கேப்டன். அவரிடம் அடுத்த போட்டியில் இந்த வெற்றியோடு கேப்டன்சிப்பை கொடுக்கிறேன். நான் வழக்கம்போல எல்லைக்கோட்டுக்கு அருகே நின்று அணிக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.