Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படம் பார்த்து கெட்டுப்போன காதல் ஜோடி: முட்டாள் தனமான முடிவை எடுத்த அவலம்...

படம் பார்த்து கெட்டுப்போன காதல் ஜோடி: முட்டாள் தனமான முடிவை எடுத்த அவலம்...
, வியாழன், 11 ஏப்ரல் 2019 (15:08 IST)
தங்களின் காதல் புனிதமானது என நிரூபிக்க காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரேம்நாத் என்ற வாலிபர் ஆயிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் தங்களின் காதல் விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதற்கு இவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது வயசு கோளாறு படிப்பை பாருங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.
 
இதனால் மனமுடைந்த பிரேம்நாத், தனது காதல் புனிதமானது என்பதை நிரூபிக்க தற்கொலை செய்ய முடிவு செய்தார். இறப்பதற்கு முன்னர் தனது காதலிக்கு வீடியோ கால் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனால் ஆயிஷாவும் துக்கம் தாளாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காதலிப்பது தவறில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்பதில்லை என்பதிலும் தவறில்லை. ஏனென்றால் நாம் அன்றாடம் பல காதல் ஜோடிகளின் பிரச்சனைகளை பார்க்கிறோம். எங்கே நம் பிள்ளை எதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ளப்போகிறார்களோ என்ற பயம் தான் பெற்றோர்களுக்கு...
 
காதலை ஏற்கவில்லை என்றால் பெற்றோர்களுக்கு தங்களின் காதலை புரிய வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இந்த மாதிரியான தற்கொலை முடிவெடுப்பதால் யாருக்கு என்ன பயன்? காதலை தாண்டி வாழ்க்கையில் நிறைய விஷயம் இருக்கிறது. ஏன் இதனை புரிந்துகொள்ளாமல் பல பிள்ளைகள் பெற்றோர்களை கஷ்டப்படுத்துகிறார்களோ?....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் ’என்னை தரக்குறைவாக பேசுகிறார் ’ - முதல்வர் குற்றச்சாட்டு