Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே.இ.தீவுகளுக்கு 419 இலக்கு: முதல் டெஸ்ட்டை கைப்பற்றுமா இந்தியா?

Advertiesment
மே.இ.தீவுகளுக்கு 419 இலக்கு: முதல் டெஸ்ட்டை கைப்பற்றுமா இந்தியா?
, ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (23:07 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீவுகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி பெற இந்தியா 419 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை மே.இ.தீவுகள் எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 297 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடி மே.இ.தீவுகள் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி ரஹானேவின் அபார சதம் மற்றும் விஹாரியின் 93 ரன்கள் உதவியால் 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
 
இதனையடுத்து தற்போது 419 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மே.இ.தீவுகள் அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டகாரர்களான பிரத்வெயிட் மற்றும் கேம்பல் களமிறங்கிய நிலையில் அந்த அணி பும்ரா பந்துவீச்சில் பிரத்வெயிண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசஷ் தொடர்: 67 ரன்கள் எடுத்து சொதப்பிய இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி