Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (20:53 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்காக விற்பனை செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுக்களில் சுமார் 29 டிக்கெட்டுக்கள் கேன்சல் செய்யப்பட்டுள்ளதால் ஐசிசி அதிர்ச்சி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் எப்படியும் இந்தியா தகுதி பெறும் என்று கணித்து ஏராளமான இந்தியர்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இறுதிப்போட்டிக்கு வாங்கியிருந்த டிக்கெட்டுக்களை கேன்சல் செய்துள்ளதாக தெரிகிறது. நேற்றும் இன்றும் மட்டுமே சுமார் 29 ஆயிரம் டிக்கெட்டுக்கள் கேன்சலாகியிருப்பதாகவும் இந்த எண்ணிக்கை வரும் ஞாயிறுக்குள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் கேன்சலான அனைத்து டிக்கெட்டுக்களும் உள்ளூர் ரசிகர்களால் விற்பனையாகிவிடும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இறுதிப்போட்டி நடைபெறும் லண்டனுக்கு பயணம் செய்ய ஏராளமான இந்தியர்கள் விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த டிக்கெட்டுக்களும் கேன்சலாகி வருகிறதாம். அதேபோல்  போட்டிகளின் இடையே கொடுக்கப்பட்டிருந்த டிவி விளம்பரங்கள் சிலவும் ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லாததால் பல்வேறு விதங்களில் பொருளாதார நஷ்டங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பது தற்போது தெரிய வருகிறது

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments