Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு!

Advertiesment
2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு!
, செவ்வாய், 20 ஜூலை 2021 (19:24 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை அடுத்து இதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சாரித் அஸ்லாங்கா 65 ரன்களும் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், சாமிகா கருணாரத்னே 44 ரன்களும் எடுத்துள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை புவனேஷ் குமார் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணி தற்போது 276 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது என்பதும், பிரிதிவ் ஷா மற்றும் கேப்டன் தவான் களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு!