Webdunia - Bharat's app for daily news and videos

Install App

190 இலக்கை நோக்கி விளையாடி வரும் ஐதராபாத்: 3 விக்கெட்டுக்களை இழந்ததால் சிக்கல்

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (22:02 IST)
190 இலக்கை நோக்கி விளையாடி வரும் ஐதராபாத்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முக்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து உள்ளது
 
அனைத்துப் போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடி வரும் தவான் இன்றைய போட்டியில் 50 பந்துகளில் 78 ரன்கள் அடித்தார். ஹெட்மையர் கடைசி நேரத்தில் இறங்கி 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்டோனிஸ் மிக அபாரமாக விளையாடி 38 ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்கள் எடுத்தார்
 
பந்துவீச்சை பொறுத்தவரை சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஹைதராபாத் அணி சற்று முன் வரை 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து உள்ளனர். கேப்டன் வார்னர் 2 ரன்களில் ரபடா பந்தில் போல்ட் ஆனதால் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல் மணிஷ்பாண்டேவும் 21 ரன்களிலும், கார்க் 17 ர்ன்களிலும் அவுட் ஆனார்கள். இதனால் ஐதராபாத் அணி தத்தளித்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments