Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 பந்துகளில் சதம்.. பிரிச்சு மேய்ந்த 14 வயது பையன்.. ராஜஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி..!

Siva
செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (07:19 IST)
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணியின் 14 வயது பையன் வைபவ் 38 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுப்மன் கில் அபாரமாக பேட்டிங் செய்து 84 ரன்கள் எடுத்தார்.
 
இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவம்சி என்ற 14 வயது பையன், 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 70 ரன்கள் அடித்த நிலையில், ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தாலும், அந்த அணி அடுத்த சுற்று செல்ல தகுதி இல்லை. இருந்தாலும், இந்த வெற்றி அந்த அணிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குஜராத் அணி  புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் பெங்களூரு, இரண்டாவது இடத்தில் மும்பை அணிகள் உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

38 பந்துகளில் சதம்.. பிரிச்சு மேய்ந்த 14 வயது பையன்.. ராஜஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி..!

டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

ஹே எவ்ளோ நேரம்… கோலியைக் கடுப்பாக்கிய அக்ஸர்… சமாதானப்படுத்திய கே எல் ராகுல்!

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்… டேபிள் டாப்.. RCB ரசிகர்களே இதெல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

‘களத்தில் விராட் கூட இருக்கும்போது எதுவுமே மேட்டர் இல்லை’… ஆட்டநாயகன் க்ருனாள் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments