டி 20 கிரிக்கெட் என்பது வெறுமனே பவுண்டரிகள் அடிப்பது மட்டும் அல்ல – கோலியின் கோல்டன் அட்வைஸ்!

vinoth
திங்கள், 28 ஏப்ரல் 2025 (14:14 IST)
நேற்று நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது.  நேற்றைய போட்டியில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து, 163 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியில் முதலில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள் விழுந்து அந்த அணித் தடுமாறியது. அப்போது விராட் கோலியுடன் கூட்டணி அமைத்த க்ருனாள் பாண்ட்யா மிகச்சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் க்ருணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 73 ரன்கள் அடித்த நிலையில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் இக்கட்டான நேரத்தில் கோலி நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ஆட்டம் முடிந்தவுடன் பேசிய அவர் “டி 20 கிரிக்கெட்டில் ஒரு விஷயத்தைத் தற்போது அனைவரும் மறந்து வருகின்றனர். அது பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது. வெறுமனே முதல் பந்தில் இருந்து பவுண்டரிகள் அடித்து ஆடுவது மட்டும் டி 20 கிரிக்கெட் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைத் தகவமைத்து விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

உடலுக்குள் தொடரும் ரத்தக்கசிவு! ஐசியுவில் ஸ்ரேயாஸ் ஐயர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓய்வெல்லாம் அதுக்குப் பிறகுதான்… ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயற்சியாளர் உறுதி!

என் போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்- ரஹானே ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments