Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

மனீஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை… தேர்வாளர்கள்தான் – டேவிட் வார்னர் ஆதங்கம்!

Advertiesment
Manish pandey exclusion is not my decision says david warner
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:49 IST)
சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை தான் நீக்கவில்லை என்று அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

டெல்லிக்கு எதிரான கடைசி ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணி கையில் இருந்த வெற்றியைப் பரிகொடுத்து சூப்பர் ஓவரிலும் சொதப்பியது. இதனால் அந்த அணி கேப்டன் டேவிட் வார்னர் விமர்சனங்களுக்கு ஆளானார். அதில் முக்கியமானதாக அந்த அணியின் முன்னனி வீரர் மனிஷ் பாண்டேவை நீக்கியது.

அதுகுறித்து பேசிய வார்னர் ‘மனிஷ் பாண்டேவை நான் நீக்கவில்லை. அது கடினமான முடிவு. அந்த முடிவை தேர்வாளர்கள்தான் எடுத்தார்கள். எல்லா முடிவையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார். இதனால் அணிக் கேப்டனுக்கும் தேர்வாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி