Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுமையை புகுத்திய ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன்

புதுமையை புகுத்திய ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன்

புதுமையை புகுத்திய ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன்

அபிராம் அருணாச்சலம்

, வெள்ளி, 1 ஜூலை 2016 (16:18 IST)
பாஸிலின் ஆஸ்தான கேமராமேன் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன் அவர்கள். கேரளா மாநிலத்தில் கொச்சியை சேர்ந்தவர் இவர். 


 


பாஸில் இயக்கிய தமிழ்ப்படங்கள் அனைத்திற்க்கும் இவரே ஒளிப்பதிவாளர். பாஸிலின் பூவே பூச்சூடவா படத்தில் மட்டும் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக இருந்தார்.  பாஸிலின் ஒரு நாள் ஒரு கனவு வரை பாஸிலின் படங்கள் அனைத்தும் கவிதை போல அருமையாக இருக்கும் அந்த கவிதையை மெருகேற்றியது இவரது ஒளிப்பதிவு. 
 
பாஸிலின் படங்கள் பெரும்பாலும் தமிழில் இருந்தாலும் கேரளாவிலேயே எடுக்கப்பட்டிருக்கும். கேரளா பொதுவாக கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் ஊர் அந்த அளவு இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஊர். அந்த கேரளாவின் அழகை இவரது கேமரா போல் எந்த தமிழ் சினிமா கலைஞர்களின் கேமராவும் அள்ளி வந்திருக்காது. 
 
வருஷம் 16 படத்தில் இடம்பெற்ற பூப்பூக்கும் மாசம் உட்பட மொத்தப்படமும் கன்னியாகுமரி எல்லையில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்திற்க்கு சொந்தமான பத்மனாபபுரம் அரண்மனையில் எடுக்கப்பட்டது அதுவரை இங்கு முழுப்படமும் எடுக்க அனுமதி கிடைத்ததில்லை சினிமாவில் பத்மனாபபுரம் பேலஸ் முழுவதும் முதன் முதலாக இவரது கேமராவுக்குள் வந்தது.  
 
அழகு கவிதை படங்கள் மட்டுமின்றி திகில் படங்களிலும் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கும் பாஸில் இயக்கிய சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்திரதாழுவிற்க்கும் இவரது கேமராவின் பங்கு அபாரமானது பத்மனாபபுரத்தின் இருட்டறைகளை அருமையாக காண்பித்திருப்பார். மேலும் கிளிப்பேச்சு கேட்கவா, பூவிழி வாசலிலே போன்ற படங்களும் இந்த திகில் பட‌ ரகத்தில் அடக்கம். பாஸில் இயக்கிய பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கற்பூர முல்லை, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட படங்களில் இவரது கேமரா புகுந்து விளையாடியுள்ளது. 
 
பாஸில் மட்டுமின்றி பாஸிலின் உதவி இயக்குனரான சித்திக்கின் ப்ரண்ட்ஸ் படத்திலும் இவரது கேமரா விளையாடியுள்ளது. 80களில் மறக்க முடியாத ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் ஆனந்தகுட்டனுக்கு மறக்க முடியாத இடமுண்டு. 300 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்துள்ள ஆனந்தகுட்டன் கடந்த 2016 பிப்ரவரி மாதம் காலமானார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் கவலை வேண்டாம்