கண்ணாமூச்சி ஆடும் கெளதம் மேனன்?

புதன், 10 மே 2017 (18:00 IST)
கடன் தொல்லையில் தவித்துவரும் கெளதம் மேனன், புது படங்களைத் தயாரிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டு வருவது எப்படி என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 
 
இயக்குநரான கெளதம் மேனன், பல படங்களைத் தயாரித்தும் வருகிறார். ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘அச்சம் என்பது  மடமையடா’ என தான் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, ‘வெப்பம்’, ‘தங்க மீன்கள்’ போன்ற வெளிப்படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுடன் இணைந்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘என்னை நோக்கி பாயும்  தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
 
இதில், செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீஸுக்கு ரெடியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், பணப்பிரச்னையால் ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளது. அதேபோல, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ  நட்சத்திரம்’ படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. கெளதம் மேனனிடம் காசு இல்லை என்பதே இதற்கு காரணம்.
 
ஆனாலும், அடுத்தடுத்த படங்களைத் தயாரிப்பதாக கெளதம் மேனனிடம் இருந்து அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. தெலுங்கில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ படத்தை, விஷ்ணு விஷால், தமன்னா நடிப்பில் ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற  பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இந்தப் படத்தையும் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவித்துள்ளார்.
 
அத்துடன், ‘துருவங்கள் 16’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன், அரவிந்த் சாமியை வைத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து கெளதம் மேனன் தயாரிக்கிறார். தயாரான படத்தை வெளியிடாமல், புதுப்புது  படங்களைத் தயாரிப்பதாக, வெறும் கையில் முழம் போடும் வித்தையை எங்கு கற்றார் கெளதம் மேனன் என்று  விவாதிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இன்று நள்ளிரவு வெளியாகும் அஜித் நடித்த விவேகம் டீஸர்!