Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் துன்பங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்...!!

Advertiesment
சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் துன்பங்கள் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்...!!
நவகிரகங்களில் முக்கியமானகிரகம் சனிபகவான். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள், நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வர பட்டத்தை அடைந்தவராவார்.
சனிப்பெயர்ச்சி எப்படி இருக்குமோ என்று அச்சப்பட தேவையில்லை. தினமும் காலை குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டுவிட்டு காகத்திற்கு ஒரு கைப்பிடி உலர் திராட்சையை அளிக்க வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் உங்களின் அத்தனை  கஷ்டங்களுக்கும் தீர்வாக அமையும்.
 
இதை செய்யமுடியாதவர்கள் காலையில் புதிதாக வெள்ளை சோறு வடித்து நாம் சாப்பிடுவதற்கு முன் அதில் எள் சிறிதளவு கலந்து காகத்திற்கு அளித்து காகம் சாப்பிட்டதற்கு பின் நாம் சாப்பிட்டு வரலாம். இதனால் நாம் அனுபவித்துவரும் துன்பங்கள் பனிபோல விலகும்.  இதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.
 
கால்கள் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு இயன்ற உதவியைச் செய்வதன் மூலம் சனிபகவானின் மனதை குளிர்விக்க முடியும். மேலும் அனுமன் வழிபாட்டை சனிக்கிழமைகளில் செய்துவருவதுடன் அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டு வந்தால் நன்மைகள் ஏற்படும்.

webdunia

 
சனிபகவான் மனிதர்கள் மட்டுமின்றி தெய்வங்களையும் பிடித்து கஷ்டம் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகிறது. ஆனால் சனிபகவானால் கூட பிடிக்க முடியாதவர் விநாயகப்பெருமான் மட்டுமே. எனவே விநாயகர் வழிபாட்டை தவறாமல் செய்துவந்தால் சனிபகவானின்  ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம்.
 
சனிபகவான் துளியும் கடமை தவறாதவர் என்று ஆன்மிக அருளாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் செய்த பாவக்கணக்குகளுக்கு ஏற்றவாறே  உங்களுக்கு சனிபகவான் துன்பங்களை அளித்து உங்களை பாவக் கணக்கிலிருந்து விடுவித்து முக்திக்கு வழிகாட்டுவார் என்று புராணங்கள் கூறுகின்றது. நீங்கள் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வருவீர்களானால் சனிபகவானை கண்டு நீங்கள் அச்சப்படவேண்டியதே இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (03-12-2018)!