Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி பகவான் தவத்தால் பெற்ற வரங்கள்...!

சனி பகவான் தவத்தால் பெற்ற வரங்கள்...!
சூரிய பகவானின் மனைவி உஷா தேவி. இவர் ஒரு சிறந்த சிவபக்தர். தன்னுடைய பலத்தை பெருக்க எண்ணிய உஷா தேவி சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுத்தார். சூரிய பகவானை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாததால், தன்னுடைய நிழலை கொண்டு சாயாதேவி என்ற பெண்ணை உருவாக்கினார்.
சாயாதேவியிடம் தான் இருந்து செய்யவேண்டிய அனைத்தையும் நீ இருந்து செய்ய வேண்டும் என்று கூறி, குதிரை வடிவம் எடுத்து சிவனை நோக்கி தவம்  இருக்க செல்கிறார் உஷா தேவி.
 
சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த குழைந்தைதான் கிருதவர்மா என்ற சனி ஆவார். சனி பகவான் தன் தந்தை வெறுத்ததால், தந்தையை காட்டிலும் பலம் பெற, சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அதன் பயனாக வரம் பெற்றார். அவை நவகிரகங்களில் ஒருவராய் இருக்க வேண்டும். நவகிரகங்களில் தன்னுடைய பார்வைக்கே வலிமை அதிகமாக இருக்க வேண்டும். தன் தந்தையை விடவும், தன் உடன் பிறந்தவர்களை விடவும், ஏன் உங்களுக்கு அடுத்த  இடத்தை எனக்கு தரவேண்டும் என்று வரம் கேட்டார்.
webdunia
சனியின் தவப்பயன் காரணமாக ஈசன் அவர் கேட்ட வரங்கள் அனைத்தையும் தந்தருளினார். அன்று முதல் சனீஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். அதனால்  சனியை கண்டு இன்றுவரை தேவாதி தேவர்கள் முதற்கொண்டு பலரும் அஞ்சுகின்றனர். பாப கிரகங்கள் வரிசையில் முதலிடம் வசிக்கும் இவரின் நட்சத்திரங்கள்  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை சோமவார விரதம் தரும் பலன்கள்...!