Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொர்ணாகர்ஷண பைரவரின் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!

Advertiesment
சொர்ணாகர்ஷண பைரவரின் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!
மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன். இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.

ஸ்ரீ கால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே சொர்ணாகர்ஷண பைரவர்.
 
நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே.  ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான். அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி;
 
ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே. பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து, வழிபட்டு வந்துள்ளனர்.
 
இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும், வலிமையோடும், சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;
 
இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது. ஆண்கள் எனில், மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்.
 
எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ, அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பிகைக்கு மிகவும் உகந்த ஆடிப்பூரத்தின் சிறப்புக்கள் !!