Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சமி நாளில் வாராஹி தேவியின் வழிபாட்டு பலன்கள் !!

Webdunia
சப்தமாதர்களில் ஒரு தேவதையாகப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி.


நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும், அவளின் பல்வேறு வடிவங்களை பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன.
 
சப்தமாதர்களின் மகிமையையும் மகோன்னதத்தையும் தேவி மஹாத்மியம் சிலாகித்துச் சொல்கிறது. இவர்களில், இந்த ஏழு பேரில், வாராஹி தேவி, மகாசக்தி வாய்ந்தவள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், சத்ரு பயம் நீங்கும். அதாவது எதிரிகள் பயம் இருக்காது. எதிரிகளைத் தோல்வியுறச் செய்து  எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவாள் என்பது ஐதீகம்.
 
‘பஞ்சமி பஞ்சபூதேஸி’ என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. ‘பஞ்சமி பைரவி பாசாங்குசை’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும்  இந்த வாராஹியை போற்றுகின்றார். காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி  கொண்டிருக்கிறாள். 
 
இந்த அன்னைக்குரிய காயத்ரி மந்திரங்களுள் ஒன்றான
 
ஓம் ஸ்யாமளாயை வித்மஹே 
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் 
 
எனும் மந்திரத்தை துன்பம் வரும் போது மட்டுமல்ல எப்போதும் ஜபித்துக் கொண்டிருந்தால் தேவியின் திருவருள் சடுதியில் கிட்டும்.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments