Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டை எவ்வாறு அமைப்பது....?

Advertiesment
வாஸ்து
ஒருவேளை வாஸ்து தவறி உங்களுடைய வீடு அமைந்து விட்டது என்றால் அந்த தோஷத்திற்கான பரிகாரத்தையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வீட்டின் நான்கு மூலைகள் என்று சொல்லப்படும் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை. இந்த நான்கு மூலைகளிலும் வைக்கவேண்டியது எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
 
ஈசானிய மூலை: ஈசானிய மூலை என்று வடகிழக்கு மூலையை தான் சொல்லுவார்கள். இந்த மூலையை எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது.
 
ஏனெனில் வீட்டிற்குள் வரக்கூடிய அனைத்து விதமான ஐஸ்வரியங்களும், நல்லவைகளும் இந்த வழி மூலமாக தான் வீட்டிற்குள் நுழையும். இந்த ஈசானிய  மூலையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கும் அறையாக அமைத்துக் கொள்ளலாம்.
 
ஈசானிய மூலையில் அதிகமாக பளு இருக்கும் பொருட்களையும் வைக்கக்கூடாது. குறிப்பாக குளியலறை செப்டிக்டேங்க் கட்டாயம் அமைக்க கூடாது.
 
இந்த மூலையில் கட்டாயமாக கனமாக இருக்கும் பீரோவை வைக்கவே கூடாது. மாறாக குடிநீர் தொட்டி, கிணறு போன்றவைகளை அமைத்துக் கொள்ளலாம்.
 
குபேர மூலை: தென்மேற்கு மூலையில் உங்கள் வீட்டில் பீரோவை வைத்துக் கொள்ளலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் வடமேற்கு மூலையில் மேற்கு பார்த்தவாறு வைத்துக் கொள்ளலாம்.
 
அக்னி மூலை: வீட்டின் தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்று அழைக்கப்படும். ஒரு வீட்டின் சமையலறை கட்டாயம் அக்னி மூலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
 
அப்படி அக்னி மூலையில் அமைக்க முடியாதவர்கள், வாயுமூலையான வடமேற்கு மூலையில் சமையல் அறையை அமைத்துக் கொள்வார்கள்.

மூலையில்  சமையலறை இருந்தாலும், உங்கள் வீட்டின் அக்னி மூலையான தென்கிழக்கு பகுதியில் சமையலுக்காக பயன்படுத்தும் பொருட்களை வைக்கவேண்டியது மிக  அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலவகையான தூபங்களும் அற்புத பலன்களும் !!