Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறப்பான பலன்களை பெற்றுதரும் குத்துவிளக்கு வழிபாடு...!!

Advertiesment
சிறப்பான பலன்களை பெற்றுதரும் குத்துவிளக்கு வழிபாடு...!!
இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது. காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்திய இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை முழுமையாக நமக்கு பெற்று தரும். 

அதனாலாயேதான் சுப நிகழ்ச்சிகளின் போதும், வழிபாட்டின்போதும் குத்துவிளக்கேற்றுவதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். குத்துவிளக்கின்  அடிப்பாகம் பிரம்ம தேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் அம்சமாய் கொண்டுள்ளது. 
 
விளக்கில் ஊற்றும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர்விட்டு எரியும் சுடர் ஆனது உலக இயக்கங்களுக்கு அடிப்படையான சக்தியின் அம்சமான மலைமகளையும் குறிக்கிறது. 
 
பஞ்சபூத சக்தியினை அடிப்படையாக செயல்படுவதை குறிக்கும்விதமாக விளக்கிற்கு ஐந்து முகங்கள் இருக்கிறது. குத்து விளக்கை ஏற்றும் பொழுது நிறைய ஆகம விதிகள் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். பலபேர் இன்றைய அவசர காலக்கட்டத்தில் அவற்றையெல்லாம் பின்பற்றுவது கிடையாது. சுத்தமாக கழுவி,  மஞ்சள் குங்குமமிட்டு, பூவைத்து, பசுஞ்சாணம் அல்லது பச்சரிசியின் மீதே குத்துவிளக்கை எப்போதும் வைக்கவேண்டும். குத்து விளக்கை ஏற்றும்பொழுது ஐந்து  முகத்திலும் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பான பலன்களை தரும். 
 
திரி முதலில் போட்டுவிட்டு நெய் விடுவது தவறான முறையாகும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போடவேண்டும். அதன் பின்புதான் தீபமேற்றி வழிபட வேண்டும். சரியான முறை இதுவே எனச்சொல்கிறது சாஸ்திரம்.
 
இத்தகைய மகத்துவம் வாய்ந்த குத்து விளக்கை எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நமது இஷ்டப்படி துலக்குவது தவறான செயலாகும். அதற்கென்று பிரத்தியேக நாட்கள் உள்ளன. எந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்கினால் பலன்கள் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!