தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் ஐந்து மரங்களில் மகாவில்வமும் ஒன்று. ஒரு முறை "மகா வில்வம்" பிரதஷினம் வந்தால், கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும்.
மகா வில்வம் வித்தியாசமானது. 5, 7, 9, 11, 12, இதழ்கள் கொண்டதாக விளங்குகிறது. வில்வத்தில் 12 வகைகள் உள்ளன. அவற்றில் மகா வில்வம், காசி வில்வம், ஏக வில்வம் என்னும் மூன்றும் முக்கியமானவை.
இதில் மஹாவில்வத்தை கோவில், ஆசிரமம், சிவசமாதி (ஜீவசமாதியின் நிஜப் பெயர்) போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்; (எக்காரணம் கொண்டும் வீட்டில், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது) .
மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு, ஒன்பது, பனிரெண்டாக இருக்கும். மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது.பன்மடங்காய் பலன்தருவது.புண்ணியத்தை மழையாகப் பொழிவது அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக வளர்க்கப்படும்.
மகா வில்வதளங்களை அதிகமாகப் பறித்தல் கூடாது. இதனால் புண்ணிய மகா வில்வ மரத்தை அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூசனைகளிலும் யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.