வடக்கு மற்றும் வடகிழக்கு வளர்ந்த(நீட்டிய) மனை: குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள். செல்வம் சொத்துக்கள் சேரும். புகழ் மதிப்பு மற்றும் பலவகையான வசதிகளும் கிடைக்கும்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு வளர்ந்த(நீட்டிய) மனை: குடும்பத்தினர் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தொழில் வளர்ச்சி, சந்தோஷம், ஆண்களின் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளர்ந்த(நீட்டிய) மனை: கிழக்கு தென்கிழக்கு வளர்ந்துள்ளது இம்மனையில் அதிக பெண் குழந்தைகள் குடும்பதில் இருக்கும். ஆண் சந்ததி குறைவாகவும் பெண் சந்ததி அதிகமாக இருக்கும். சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் போன்றவை ஏற்படும். பெண்கள் உடல்நலம் கெட்டு வியாதிகள் ஏற்படலாம்.
மேற்கில் வடமேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: மேற்கில் வடமேற்கு வளர்ந்த மனையில் ஆண்களுக்கு மனச்சஞ்சலங்கள் ஏற்படும். புகழ் கெடும். பொருளாதாரம் சீர்கெடும். வழக்கு, கோர்ட் என அலைய வைக்கும் சில சமயங்களில் வெற்றி தரும்.
வடக்கு மற்றும் வடமேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: குடும்பத்தில் ஆண்கள் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு ஆளாவார்கள். பெண்களாலும் பிரச்சினைகள் ஏற்பட்டு விவகாரங்கள் நீதிமன்றத்துக்குப் போய் வீண் செலவுகள் ஏற்படுத்தும்.
தெற்கு, தென்மேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: தெற்கு-தென்மேற்கு வளர்ந்த மனை பெண்கள் அதிக கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஆண்கள் சண்டை பிடிப்பவர்களாகவும், இஷ்டத்துக்கு செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
மேற்கு தென் மேற்கு வளர்ந்த(நீட்டிய) மனை: மேற்கு தென்மேற்கு வளர்ந்த மனை ஆண்களுக்கு உடல் நலம் கெடும். சண்டை சச்சரவுகள் ஏற்படும். விபத்து நேரலாம். அநியாயமாகச் சொத்து சேர்த்து அதே தீய வழிகளில் விரையமாகும். ஆண்கள் ஒரு தொழில் நிலையாக இருக்க மாட்டார்கள். அதனால் தொழில் பாதிக்கப்படும்.