Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செவ்வாய் பகவானின் அருளை பெற என்ன செய்யவேண்டும்...?

செவ்வாய் பகவானின் அருளை பெற என்ன செய்யவேண்டும்...?
நவக்கிரகங்களில் ஒரு கிரகம், செவ்வாய். செவ்வாய் பகவானின் செந்நிறம் கொண்டவர். மேலும் பூமாதேவிதான் செவ்வாயை வளர்த்ததாக விவரிக்கிறது புராணம். 

சிவனாரின் நெற்றியில் இருந்து ஒரு துளி நீர் பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியே மங்களன் என்றும் அவனை பூமாதேவி வளர்த்தாள் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
 
மங்களன், சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக, மங்களனின் தேகத்தில் இருந்து யோகாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அவனுடைய தவத்தால், நவக்கிரகங்களில் ஒருவனானான். செவ்வாய் கிரகமாக மட்டுமின்றி அங்காரகன் எனும் பெயரில், செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியைப் பெற்றான்.
 
அங்காரக தெய்வமான செவ்வாய் பகவான், தன்னை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களின் கோரிக்கைகள் மற்றும் செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் நீங்க செய்வான். அங்காரகனின் வாகனம் ஆடு. எனவே,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் பலமின்றி இருப்பவர்கள், ஆடுகளுக்கு  உணவிடலாம்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக, செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். அதனால் தான் முருகப்பெருமானு க்கு உரிய நாளாக செவ்வாய்க்கிழமையைச் சொல்கிறார்கள். ஆகவே, செவ்வாய்க் கிழமைகளில், முருகப்பெருமானையும் செவ்வாய் பகவானையும் ஒருசேர மனதில் நினைத்து, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில்  திருமண யோகத்தைத் தந்தருள்வான். தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
 
முக்கியமாக, முருகப்பெருமானை வணங்கினால், வீடு மனை யோகம் கிடைக்கும்; அருளுவான் என்பார்கள். இதற்குக் காரணம் செவ்வாய் பகவான் தான். பூமி அன்னையால் வளர்ந்தவர் செவ்வாய் பகவான். ஆகவே, முருகப் பெருமானை வணங்கினால், செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி வலுப்பெற செய்யவேண்டிய வழிமுறைகள் என்ன...?