Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாய் கிடைக்க என்ன செய்யவேண்டும்...?

Advertiesment
மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாய் கிடைக்க என்ன செய்யவேண்டும்...?
சங்கு, உப்பு, வெள்ளி, பால், துளசி மாதிரியான சில பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். நாம் சமையலில் பயன்படுத்தும் கிராம்பு மற்றும் ஏலக்காயிலும் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. 


கிராம்பும், ஏலமும் மூலிகை வகையை சார்ந்தது. மகாலட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவை அடங்கும்.
 
சிலருக்கு பலவழிகளில் செலவழிந்துக் கொண்டே இருக்கும். பணம் வந்துக்கொண்டே இருந்தாலும், நிலையாய் வீட்டில் பணம் தங்காமல் மருத்துவ செலவு, வாகன  பழுது, வீட்டு உபயோகப்பொருட்களின் பழுது என ஏதாவது செலவு வந்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தை கரைத்துக்கொண்டு போய்விடும். இதற்கு வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லையென பெரியவர்கள் சொல்வார்கள். மகாலட்சுமியின் அருள் இருந்தால், வீட்டில் செல்வம் தங்கும்.
 
மகாலட்சுமியின் அருள் நம் வீட்டில் என்றும் நிலைத்திருக்க பல வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் ஏலக்காய், கிராம்பு மாலையை மகாலட்சுமிக்கு சார்த்தி வழிபடுவது அனைத்து செல்வ வளத்தையும் பெற்றுத்தரும்.
 
54 அல்லது 108 கிராம்பையும், அதே எண்ணிக்கையில் ஏலக்காயையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி, நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து  கொள்ளுங்கள். கிராம்பை பூ காட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டி கொள்ளுங்கள். 

webdunia
நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல், காய்ந்த திராட்சை முத்துக்கள், மாதுளம் பழம் 1, நெல்லிக்கனிகள் 5 இவற்றை ஒரு தட்டில் வைத்து விளக்கின் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை-பாக்கு, பழம் வைத்து அதன் மீது 501 ரூபாய் காணிக்கை வைக்கவும். இந்த இரண்டு மாலைகளையும் விளக்கிற்கு சாற்றி  விளக்கின் 5 முகங்களிலும் தீபமேற்ற வேண்டும். தீபம் ஏற்ற வேண்டிய நேரம் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நேரத்தில் செய்து கொள்ளலாம். 
 
தீபம் ஏற்றும்போது மகாலட்சுமிக்கு உகந்த எதாவது ஸ்லோகத்தை சொல்லலாம். இதுப்போல தொடர்ந்து 21 வாரங்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து வருவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாய் கிட்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகத்துவம் நிறைந்த ஆடி மாதமும் விரத பலன்களும்...!!