Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடுகளில் லட்சுமிதேவி நிரந்தரமாக தங்க என்ன செய்யவேண்டும்...?

வீடுகளில் லட்சுமிதேவி நிரந்தரமாக தங்க என்ன செய்யவேண்டும்...?
வீடுகளில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி வீட்டில் உள்ல பெண்கள் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார்கள், அவற்றுள் மிக முக்கியமானது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  வீடுகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் யாரும் தூங்குதல் கூடாது, மேலும் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் வீட்டில் தலைமுடியினை விரித்து இருத்தல்  கூடாது. 
 
6 மணி ஆனதும் விளக்கினை ஏற்றி வழிபடுதல் வேண்டும், அதிலும் குறிப்பாக எட்டு வகையான எண்ணெய்களைக் கொண்டு தீபம் ஏற்றுதல் வேண்டும். விளக்கினை  நாம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது.
 
பூக்களைக் கொண்டு ஒத்தி எடுத்து விளக்கினை அணைத்தல் வேண்டும், மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் வீட்டில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தில் பூவை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
 
அம்மனின் புகைப்படங்களுக்கு தினசரிக்கு பூ வைத்து வழிபடவும், செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் புகைப்படத்தினைத் துடைத்து சந்தனம் குங்குமம் குழைத்துப் பொட்டு வைத்துவிடல் வேண்டும், மேலும் உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து: சமையலறையை எந்த திசையில் இருக்குமாறு அமைக்கவேண்டும்...?