Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாவங்களை போக்கும் சிவன் மந்திரம் பற்றி தெரியுமா...?

பாவங்களை போக்கும் சிவன் மந்திரம் பற்றி தெரியுமா...?
மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ஈசன், கெட்டவர்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல், நம் சிந்தைகளில் இருந்து கெட்டனவற்றை அழிக்கக்கூடியவர்.

பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்கவேண்டும்.
 
ஒருவர் செய்யும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற தீய விளைவுகள் அவர்கள் அனுபவிக்க நேரிடும். அத்தைகைய பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த  தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி  இறைவனை வணங்க  வேண்டும்.
 
சிவ மந்திரம்:
 
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
 
சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ  தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும்  ஏற்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரிகார பூஜைகள் செய்ய சிறந்த ராகு காலம் !!