Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்னப்பூரணியின் அருளை பெற இருக்க வேண்டிய விரதமுறைகள் என்ன...?

அன்னப்பூரணியின் அருளை பெற இருக்க வேண்டிய விரதமுறைகள் என்ன...?
அன்னபூரணி தேவிக்கான விரதம் இருப்போர், அனைத்து மாதங்களிலும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும்.

அன்னப் பூரணி தேவியின் வரம் கிடைத்தால், வீட்டில் உள்ள பசி, பிணி போன்றவை காணாமல் போகும். இதனால் வீட்டில் உள்ள வறுமை காணாமல் போக  வேண்டுவோர் பசி, வறுமை காணாமல் போக வேண்டுவோர், அன்னபூரணி தேவியின் அனுகூலத்தை நிச்சயம் பெறுதல் வேண்டும்.
 
அதாவது அன்னப் பூரணியின் அனுகூலத்தைப் பெற நினைப்போர் எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்று பார்க்கலாம். அன்னபூரணி தேவிக்கான விரதம் இருப்போர், அனைத்து மாதங்களிலும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்து வரவேண்டும்.
 
அதாவது காலையில் எழுந்து குளித்து வீட்டினை சுத்தம் செய்தல் வேண்டும், மேலும் பூஜை அறையினை சுத்தம் செய்து, சாமிப் புகைப்படங்களை புது துணி கொண்டு துடைத்தல் வேண்டும், மேலும் மணல் பலகை ஒன்றினை வைத்து அதன் மீது வெள்ளை துணியை போட்டு விரிக்கவும். 
 
அடுத்து பாத்திரத்தில் அரிசி மற்றும் பூக்கள், பழங்கள் மற்றும் இனிப்பு வகைகள், சுண்டல், இனிப்பு பொங்கல் மற்றும் பாயாசம், கற்கண்டு, வெற்றிலை, பாக்கு வைத்து சாம்பிராணியைத் தூபம் காட்டுதல் வேண்டும், மேலும் கற்பூரம் காட்ட வேண்டும். மேலும் படைத்த நைவேத்தியங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க  வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (28-09-2020)!