Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் பலன்கள் என்ன...?

Advertiesment
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் பலன்கள் என்ன...?
பிரம்ம முகூர்த்தம் என்பது படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்ம தேவரை குறிப்பதாகும். பிரம்ம முகூர்த்தம் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாகும்.


இந்த நேரத்தில் நாம் செய்ய தொடங்கும் செய்ய நினைக்கும் எந்த ஒரு செயலும் தடையின்றி நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பின் அந்நாளில் செய்யவேண்டிய நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.
 
பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேச நிகழ்ச்சிகள் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்து தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
 
பிரம்ம முகூர்த்ததில் எவ்வாறு வழிபட வேண்டுமென்றால் பெண்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து நெற்றியில் திலகமிட வேண்டும். பின் வீட்டினையும், பூஜை அறையும் சுத்தம் செய்ய வேண்டும். 
 
பூஜை அறையில் மாகோலமிட்டு விளக்கை ஏற்ற வேண்டும். ஏதேனும் ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். நம் வேண்டுதலை மனமுருகி  பிரார்த்தனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும். 
 
பிரம்ம முகூர்த்தத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது பலமடங்கு புன்ணியத்தை நமக்கு தேடித் தரும். இந்நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதை காட்டிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பல்வேறு பலன்களை அள்ளித் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தரகாண்டத்தை படிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?