கருடனை எந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன்கள் !!
மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மிகவும் சிறப்பானதாகும். கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.
வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அதுமட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.
கருடன் மங்கள வடிவானவர். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்வதால் நோய்கள் நீங்கி நலம் உண்டாகும்.
திங்கட்கிழமைகளில் கருடனை தரிசித்தால் துன்பங்களும், துயரங்களும் விலகி இன்பமான வாழ்க்கை அமையும்.
கருடனை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்தால் துணிவும், மகிழ்ச்சியும் பிறக்கும்.
புதன்கிழமைகளில் கருடனை தரிசித்தால் பகைவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். நீங்கள் செய்யும் செயலில் வெற்றி உண்டாகும்.
வியாழக்கிழமைகளில் கருடனை தரிசித்தால் நீண்ட ஆயுளும், செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அடுத்த கட்டுரையில்