Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியான பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா....?

தியான பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா....?
தியானம் என்பது கவனக் குவிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு தனி நபரின் பிரக்ஞையை உயர்த்தும் உத்தியே என அறிவியல் விளக்குகிறது. ஆனால் ஹிந்து தத்துவமோ ஒருவரின் ஆன்மாவை உணர்வதற்கான வழிமுறையே தியானம் என வரையறுக்கிறது.  தியானத்தின் பலன்கள் அதிகம். அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானமானது ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது. நடத்தையைச் சீராக்கும் சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது
 
கவலையை விரட்டுகிறது. ஒருவனின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை இலட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது. அனைத்தும் உள்ளடக்கிய மருந்தாக அமைகிறது.
 
அகங்காரத்தைப் போக்குகிறது. தனிநபரை எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வைக்கிறது. எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் உத்தியாக  அமைகிறது.
 
ஆரோக்கியத்தின் அற்புதத் திறவுகோலாக அமைகிறது. தியானம் மூலமாக உடல் ரீதியான அற்புத ஆற்றல்களைப் பெற முடிகிறது. தியானம் மூலமாக தானியங்கி நரம்பு மண்டலத்தை நினைத்தபடி கட்டுப்படுத்த முடிகிறது.
 
மன அழுத்தம் மூலமாக வரும் அனைத்துச் சிக்கல்களையும் போக்குகிறது. மனித ஆற்றலைப் பற்றிய விரிவான காட்சியைத் தருகிறது. வேக யுகத்தின் தொழில்நுட்ப கலாசாரத்தின் கொடுமைகளை நீக்குகிறது.
webdunia
வாழ்க்கையின் மதிப்புகளை அறிய வைக்கிறது. கற்பதற்கு மிகவும் சுலபமானது. பயிற்சி செய்ய மிகவும் சுலபமானது. தியானத்தின் போது இன்பமான, ஆச்சரியகரமான அனுபவங்கள் கிடைக்கிறது. நீடித்த ஆரோக்கியமான வாழ்வு உறுதி செய்யப்படுகிறது.
 
ஆன்மீக ரீதியான முன்னேற்றம் தருகிறது. மனிதனின் பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தும் அனைத்து நற்குணங்களையும் தியானம்  உள்ளடக்கியுள்ளது.
 
கெட்ட கனவுகளை நீக்குகிறது. இரவில் நன்கு தூங்க முடிவதை உறுதி செய்கிறது. மன அழுத்தம் ஏற்படுகையில் உருவாகும் தாடை, முதுகு, தோள்கள் ஆகியவற்றில் ஏற்படும் இறுக்கம் வராது. எப்போதும் சாந்தியுடன் இருக்க முடிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்ப்பதால் வாஸ்து பிரச்சனைகளை போக்குமா....?