Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...?

தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும்  உகந்தவை.
இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும்,  கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும்  போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை  குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
 
தீபங்களும் திசைகளும்:
 
கிழக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.
மேற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தில்லை, சனிப் பீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீக்கும்.
வடக்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால், செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு - இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
webdunia
தீபங்கள் ஏற்றும் போது சொல்லவேண்டிய மந்திரம்:
 
கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.
 
பொருள்:
 
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம்  பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர்: ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா!!