Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த வகையான தானங்கள் செய்வதின் மூலம் என்ன பலன்களை பெறமுடியும்....!!

எந்த வகையான தானங்கள் செய்வதின் மூலம் என்ன பலன்களை பெறமுடியும்....!!
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய், குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு  மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
 
ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல  தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.
 
நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன்,குடிகாரன், குரு துரோகி ,பசுவை  கொன்றவன், சண்டாளன் இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு-கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும்  ஆசிகளை தரும்.
 
பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவபெருமானின் இந்த மந்திரத்தை சொல்வதால் உண்டாகும் பயன்கள்...!!