திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார் இதனால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.
திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவ ருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படு கிற து. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர் உண்டு.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்பு ள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.