Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

Advertiesment
தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன.
எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி  வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் ஓரிருவேலைகளில் விளக்கேற்றுவதும், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
 
விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுவதால், தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
 
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.
 
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்றவேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக ஒரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக  வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-11-2019)!