Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கந்தசஷ்டி விழா கொண்டாடுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?

கந்தசஷ்டி விழா கொண்டாடுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?
சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது எனவே கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழ கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும்  கந்தபுராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
 
ஒரு சமயம் முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத  அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து  வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.
 
கந்தப்புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகணை எழுந்தருளச்செய்து நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார்.  இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்மீகத்தில் சில கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்...!!