Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எவ்விதமான துர்க்கை பூஜை பலன்களை பெற்று தரும்...?

எவ்விதமான துர்க்கை பூஜை பலன்களை பெற்று தரும்...?
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும்  படையலை தந்து பூஜை செய்தால் எல்லாவித தரித்திரமும் நீங்கும். 

சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை: 15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு  பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு,  குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
 
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி  பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது).
 
மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை: ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை  சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான  திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
 
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும்  படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
 
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல  சர்ப்ப தேர்களும் விலகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரி நன்னாளில் சரஸ்வதி தேவியின் வழிபாட்டு பலன்கள் !!