Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவராத்திரி நன்னாளில் மஹாலஷ்மி வழிபாட்டு பலன்கள் !!

நவராத்திரி நன்னாளில் மஹாலஷ்மி வழிபாட்டு பலன்கள் !!
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்குபவள் அன்னை மகாலட்சுமியை நவராத்திரி நன்னாளில் வழிபாடு செய்வோம். 


குபேரனுடன் தொடர்புகொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகாலட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது.
 
லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ எனறு அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். 
 
இந்த அஷ்ட ஐஸ்வரியங்களையும் ஒருவனால் பெற முடியும். அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அன்னை மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது.
 
ஆலய வழிபாடும் அப்பழுக்கில்லாத அழகிய உள்ளம் கொண்ட எவரும் திருமகளின் திருவருளை எளிதில் பெற்றுவிடலாம். ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை மகா லட்சுமியை ஆலயங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். 
 
ஸ்ரீசூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும் தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம்.
 
தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும் பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. இயலாதவர்கள் வீடுகளில் திருக்கேற்றி வைத்து தீபச் சுடரையே மகாலட்சுமியாகக் கருதி வழிபடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிஸ்தா பருப்பில் உள்ள பயன்கள் என்ன...?