Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த பொருட்களை தானம் கொடுத்தால் என்ன பலன்கள் கிடைக்கும்...?

Advertiesment
எந்த பொருட்களை தானம் கொடுத்தால் என்ன பலன்கள் கிடைக்கும்...?
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீருவதோடு, பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அந்த வகையில் நாம் தானம் செய்யும் போது இந்த ஒரு  பொருளை சேர்த்து தானம் செய்தால் நமக்கு கிடைக்கும் புண்ணியத்தின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். 

அன்னதானம், வஸ்திரதானம், பணதானம் இது போன்ற பல்வேறு விதமான தானங்களை நாம் செய்யும்போது துளசி இலைகளையும் சேர்த்து தானம் செய்தால்  இரட்டிப்பான பலனை அளிக்கும் என்கிறது சாஸ்திரம்.
 
துளசியை தானமாக கொடுத்தால் உங்களுக்கு தனவரவு அதிகரிக்கும். இனி வரும் நாட்களில் நீங்கள் தானம் செய்யும்போது முழுமனதோடு, சந்தோஷத்தோடு துளசி  இலைகளையும் சேர்த்து தானம் வழங்கி புண்ணியத்தை இரட்டிப்பாக சேர்த்துக்கொள்ள்ளுங்கள்.

தானத்தின் பலன்கள்:
 
மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
பூமி தானம் - இகபரசுகங்கள்
வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்.
குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி, துக்கநிவர்த்தி
நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்.
வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்.
தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்.
சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்.
தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்.
கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி.
பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
பால் தானம் - சவுபாக்கியம். 
சந்தனக்கட்டை தானம் - புகழ். 
அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
வெள்ளி தானம் - மனக்கவலை. நீங்கும். பித்ருகள் ஆசிகிடைக்கும்.
விதை தானம் - வம்ச விருத்தியை தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னோர்களுக்கு செய்யும் பித்ரு தர்ப்பணம் - பித்ரு ஸ்துதி !!