Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் செல்வம் உண்டாக நாம் செய்ய வேண்டியவை...!

Advertiesment
செல்வம் வளம்
காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலித்தால், அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
 
எந்தப் பொருளையும் இல்லை எனக் கூறக்கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது.
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
 
செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து: தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க் கூடாதவை!